கனடாவில் விற்பனையாகின்றது தமிழ் விசன் தொலைக்காட்சி!.

கனடாவில் விற்பனையாகின்றது தமிழ் விசன் தொலைக்காட்சி!..

கனடாவில் தமிழர்களிடையே சேவையாற்றி வந்த தமிழ்விசன் தொலைக்காட்சி தங்களது நிறுவனத்தி;ன் தற்போதைய நிதி நிலைமை, இயங்குதிறன் என்பவற்றைக் கவனத்திலெடுத்து தமது நிறுவனத்தை விற்பது என்ற முடிவிற்கு வந்துள்ளனர் என அதன் முகாமையாளர் திரு.பி.விக்கினேஸ்வரன் அனுப்பிய செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களுக்கான ஒரு சக்திவாய்ந்த ஊடகத்தின் அவசியத்தை உணர்ந்து ஆரம்பிக்கப்பட்ட TVI தொலைக்காட்சி சேவை கடந்த பதினைந்து வருடங்களாக ரொறன்ரோவைத் தளமாகக் கொண்டு இயங்கி வந்தது.

ஈழத்தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலை கலாச்சார மேம்பாட்டிற்கு சேவையாற்றி வந்த TVI நிறுவனத்தின் பங்குதாரர்கள் தங்களது கூட்டத்தில் விற்பதற்கான முடிவை பெரும்பாண்மை பெற்று நிறைவேற்றியுள்ளனர்.

தங்களது TVI சேவையை அன்றாடம் நடத்துவதற்கான பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் TVI யின் அபிவிருத்திக்கென தாம் ஒதுக்கிவைத்திருந்த பணத்தை செலவுசெய்யவேண்டிய நிலை கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ளது எனவும்,

சட்டரீதியாகக் கோரப்பட்டிருக்கும் இரண்டுலட்சத்து எண்பதாயிரம் ($280,000.00) டொலர்கள் உட்பட ஊழியர்களுக்கான கொடுப்பனவு, சட்ட வல்லுனர்கள், கணக்காளர்கள் போன்ற தொழில்சார் வல்லுனர்களுக்கான கொடுப்பனவு மற்றும் அரசாங்கத்துக்கான கொடுப்பனவுகள் உட்பட ஏறக்குறைய ஐந்து இலட்சம் ($500,000.00)டொலர்கள் கடன் உடனடியாகத் தீர்க்கப்படவேண்டியுள்ளது என்பதுமே முக்கிய காரணங்களாகக் காட்டப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாக TVI சேவையை வெற்றிகரமாக இயக்கமுடியாத நிலை தோன்றியுள்ளதற்கான காரணங்களாக, ஒன்றாக இணைந்து வெற்றிகரமாக இயங்கிவந்த TVI தொலைக்காட்சி சேவையும் வானொலிச் சேவையும் தவிர்க்க முடியாத காரணங்களால் 2010ஆம் ஆண்டு பிரிந்து செயற்படவேண்டி நேர்ந்தது ஒரு காரணம் எனவும்,

அதிக தமிழ்த் தொலைக்காட்சி சேவைகளின் வருகை ஏற்படுத்திய போட்டி காரணமாகவும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மக்கள் பல வழிகளிலும் தொலைக்காட்சி சேவைகளை மிகக் குறைந்த கட்டணத்திலோ அல்லது இலவசமாகவோ பார்க்கக்கூடிய நிலை ஏற்பட்டதாலும்,

கனேடியப் பொருளாதாரச் சூழ்நிலையில் இயங்கவேண்டிய எமது தொலைக்காட்சி சேவையைப் பெறுவதற்கான கட்டணம் அதிகமாக இருப்பதாலும், முறைப்படி கட்டணம் செலுத்தி எமது சேவையைப் பெறுகின்ற பார்வையாளர்களின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது மற்றும் விளம்பரங்களை ஒளிபரப்புவதனால் கிடைத்த வருமானத்தில் பெரும் சரிவு ஏற்பட்டது என்பனவற்றோடு,

இறக்குமதி செய்யப்படும் இந்திய தமிழ்த் தொலைக்காட்சி சேவைகளின் நிகழ்ச்சிகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய நிகழ்ச்சிகளை இங்கு தயாரிப்பதற்குவேண்டிய பொருளாதார வசதியை நாம் கொண்டிருக்கவில்லை எனவும் அறிவித்துள்ள மேற்படி நிர்வாகம்,

இத்தகைய இக்கட்டான நிலையில் TVI நிறுவனத்தின் பங்குதாரர்களாகிய நாம் சமூகத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், மற்றும் தொழில்சார் வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து தமிழ்ச் சமூகத்திற்கு மேலும் நன்மை பயக்கக்கூடிய ஒரு முடிவை எடுத்துள்ளோம் எனவும்,

TVI நிறுவனத்துடன் நீண்டகாலம் தொடர்புகளைப் பேணிவரும் ஒருவரின் கோரிக்கைக்கு இணங்க, அவரது நிறுவனத்திடம் TVIயின் சொத்துக்களைக் கையளிப்பதன்மூலம், அந்த நிறுவனம் TVI எமது சமூகத்திற்கான அதன் சேவையைத் தொடர்ந்து செய்யும் நிலையை ஏற்படுத்துவது என்ற முடிவை எட்டியுள்ளதாகவும்,

இதன்மூலம் TVI பங்குதாரர்கள் வரும் ஏழரை வருடத்திற்குள் 1.6 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொள்வார்கள். அத்துடன் TVI யிடம் சட்டரீதியாகக் கோரப்பட்டிருக்கும் இரண்டு இலட்சத்து எண்பதினாயிரம் டொலர்களுக்கான வழக்கு கைவிடப்படும் என்றும்,

TVI பங்குதாரர்கள் பெறும் 1.6 மில்லியன் டொலர்களில் ($1,600,000.00); ஒருலட்சம் ($100,000.00)டொலர்களை எடுத்து TVI யின் அபிவிருத்திக்கென தாம் ஒதுக்கிவைத்திருக்கும் பணத்துடன் சேர்த்து தமக்கிருக்கும் கடன்களை அடைப்பது, மீதமுள்ள 1.5 மில்லியன் டொலர்களைக் ($1,500,000.00)கொண்டு ஒரு பொதுநிதியத்தை (அறக்கட்டளை) ஆரம்பிப்பது என அன்றைய கூட்டத்தில் பங்குதாரர் தீர்மாணித்துள்ளனர்.

இதுவரை ஓர் ஊடகமாக மிகவும் கஷ்டமான நிலையிலும் மக்களுக்குச் சேவையாற்றிவந்த TVI அதன் சேவையைத் தொடரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதோடு அதன்மூலம் ஏற்படுத்தப்பட இருக்கும் அறக்கட்டளை மூலம் கனடாவாழ் தமிழ் இளைஞர்களுக்கும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் நலிவுற்ற மக்களுக்கும் உதவிசெய்யும் வாய்ப்புக் கிடைத்திருப்பது மிக முக்கியமான ஒரு விடயமாகும் எனத் தெரிவித்துள்ள இயக்குனர்கள்,

எமது சமூகத்திலிருந்து தெரிவுசெய்யப்படுபவர்கள் இந்த அறக்கட்டளை பொறுப்பாக இருந்து வழிநடத்துவார்கள் என்பதையும், தமிழர் நலனுக்குத் தொண்டாற்றும் பிரதான அமைப்புகளும் இதில் பங்குபற்றலாம் எனவும், மிகவும் வெளிப்படையான தன்மையில் கனேடியத் தமிழர்களின் பங்களிப்புடன் இந்த அறக்கட்டளை அமைப்புமுறை, இயங்கும் தன்மை, யாப்பு முதலியன முடிசெய்யப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

அத்தோடு, திட்டமிட்டபடி உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டபின் தாங்கள் சகல ஊடகங்களையும் தமிழ் சமூக ஆர்வலர்களையும் அழைத்து அறக்கட்டளை அமைப்பதற்கான ஆலோசனைகளைப் பெறுவோம் என்பதையும் தெரிவித்துள்ளர்.
TVI-Press Release June 12 2016
TVI-Press Release June 12 2016-1
TVI01

4,252 total views, 4,252 views today

– See more at: http://www.canadamirror.com/canada/64274.html#sthash.wnErMhvf.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News