Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஏ9 வீதியில் கிடந்த மர்ம பொதி!! போக்குவரத்துக்கள் முடக்கம்

April 29, 2019
in News, Politics, World
0

வவுனியா ஏ9 வீதியில் சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் அநாதரவாக கிடந்த பயண பொதியினால் பெரும் பதற்றம் ஏற்பட்டதோடு வாகன போக்குவரத்துக்களும் சுமார் அரை மணிநேரம் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.

பஸ் தரிப்பிடத்தில் பாரிய பயண பொதியொன்று உரிமை கோரப்படாத நிலையில் நீண்ட நேரமாக காணப்பட்டமையால் அருகில் உள்ள இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட இராணுவத்தினர் ஏ9 வீதியில் போக்குவரத்தை தடை செய்ததோடு குறித்த பகுதியில் பாதுகாப்பையும் பலப்படுத்தி பொதியை பரிசோதனை செய்தனர்.

இதன் போது குறித்த பயண பொதியினுள் ஆபத்தான பொருட்கள் ஏதும் இல்லை என தெரியவந்த நிலையில் ஓமந்தை பகுதியில் இருந்து வருகைதந்த இளைஞன் ஒருவன் குறித்த பொதி தன்னுடையது எனவும் பயணத்திற்காக காத்திருந்த போது பஸ்ஸை தவறவிட்டமையினால் தனது குடும்பத்தினரை பஸ்ஸில் ஏற்றுவதற்காக மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்ற சமயம் குறித்த பொதியை இங்கு வைத்து சென்றதாக இராணுவத்தினரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு அவரது மனைவியும் மகளும் வருகைதந்த நிலையில் அவர்கள் தொடர்பாக இராணுவத்தினர் தகவல்களை பெற்றதன் பின்னர் அங்கிருந்து செல்ல அனுமதித்திருந்தனர்.

Previous Post

கோத்தாபய தலைமையில் விசேட படையணி

Next Post

ஹொட்டலில் தாக்குதல் நடத்திய முக்கிய சூத்திரதாரி அதிரடியாக கைது

Next Post

ஹொட்டலில் தாக்குதல் நடத்திய முக்கிய சூத்திரதாரி அதிரடியாக கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures