“உலக சாம்பியன்” ஜேர்மனி மண்ணை கவ்வியது ஏன்?
யூரோ கிண்ண கால்பந்து தொடரில் உலக சாம்பியன் ஜேர்மனி 0-2 என பிரான்சிடம் தோற்றது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் கிடைத்த பல வாய்ப்புகளை வீணாக கோட்டை விட்டது தான் ஜேர்மனி அணிக்கு பெரிய ஆப்பாக அமைந்து விட்டது.
இந்த தொடரின் ஆரம்பத்தில் 2014ம் ஆண்டு உலகக் கிண்ணப் இறுதிப் போட்டியின் ஹீரோவான கோட்சாவை முன்கள வீரராக களமிறங்கியது.
இதன் பின்னர் மரியா கோமெஜ் வந்தார். இவருக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட ஜேர்மனி அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
இதற்கடுத்து சிறந்த பினிஷரான தாமஸ் முல்லர் வந்தார். ஆனால் இவரும் கிடைத்த வாய்ப்பை எல்லாம் கோட்டைவிட்டார். இவர் சிறப்பாக செயல்பட்டிருந்தால் ஜேர்மனி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கலாம்.
இதே போல் மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட முடியாமல் திணறியதும் அந்த அணிக்கு தோல்வியைத் தேடித் தந்துள்ளது.
மரியா கோமெஜ், ரியுஸ் இல்லாததும், முல்லர் கோல் அடிக்காததும் பெரிய ஏமாற்றம். இது தவிர, சமி கெடீராவுக்கு காயம், ஹம்மல்ஸ் தடை மற்றும் 2வது பாதியில் போயட்டங் திரும்பியது போன்றவற்றை ஜேர்மனி அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறலாம்.