இருமுகன் பாடல்கள் ஒரு பார்வை
பத்து எண்றதுக்குள்ள படத்தின் தோல்விக்கு பிறகு வெற்றி கிடைக்க வேண்டிய கட்டாயத்தில் விக்ரம் நடித்துள்ள படம் இருமுகன்.
நயன்தாராவுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ள இப்படத்தை அரிமாநம்பி இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ளார். ஹாரிஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் 5 பாடல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஓ மாயா
டூயட் பாடலாக வந்திருக்கும் ஓ மாயா பாடல் ஸ்டைலிஷ் மெலோடியாக அமைந்திருக்கிறது. தாமரை வரிகளில் NC காருண்யா, ரம்யா குரலில் மனதை வருடும் பாடலாக அமைந்துள்ளது.
கண்ணை விட்டு
மதன் கார்க்கியின் வழக்கமான வித்தியாசமான வரிகளில் கண்ணை விட்டு பாடல் சோகமான மெலோடி பாடலாக அமைந்துள்ளது. யம்மா யம்மா காதல் பொய்யம்மா சாயலில் வரும் காதல் பிரிவு பாடலாகவே தோன்றுகிறது.
இருமுகன் சேட்டை
பாஸ்ட் பீட் பாடலான இருமுகன் சேட்டையில் பெரும்பாலான ரேப் வரிகளாகத்தான் உள்ளது. ஹிப்ஹாப் இசையும் கலந்து வருகிறது. கவிதை குண்டர் எம்சி ஜெஸ் எழுதி ரேப் செய்திருக்கும் பாடலில் நாயகி பகுதியை மாளவிகா மனோஜ் பாடியுள்ளார்.
ஹலேனா (Halena)
ஹாரிஸ் ஜெயராஜின் டிரேட் மார்க் பாடலாக ஒவ்வொரு படத்திலும் வரும் புரியாத வார்த்தைகள் வடிவத்தில் உள்ள பாடல் தான் ஹலேனா. கார்க்கியின் சமகால வரிகளில் கிறிஸ்டோபர் ஸ்டான்லி, அபய் ஜோத்புர்கர், உஜ்ஜய்னி ராய் குரலில் அசத்துகிறது. இந்த ஆல்பத்தின் ஹிட்பாடல் இது தான்.
பேஸ் ஆப் (Face Off)
இப்படத்தின் தீம் பாடலாக வந்துள்ளது பேஸ் ஆப். வரும் ஒரு சில வரிகளும் ஆங்கிலத்திலேயே உள்ளது. மரியா ராய் வின்சென்ட்டின் குரலில் தீம் பாடல் மிரட்டலாக வந்துள்ளது. சில பகுதிகள் மற்ற படங்களை ஞாபகப்படுத்துவதை தடுக்க முடியவில்லை.
மொத்தத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இசை இல்லை என்றே கூறலாம்.