இராக்கில் கார் குண்டு வெடித்ததில் குறைந்தது ஒன்பது பேர் பலி
இராக் தலைநகர் பாக்தாதில் ஒரு கார் குண்டு வெடித்ததில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் , மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
ஷியா முஸ்லிம் ஆதிக்கம் மிகுந்த, ரஷிதியா மாவட்டத்தில் உள்ள சந்தையை இலக்கு வைத்து இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் கர்ராடா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 290 பேருக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாக்தாத் அதிஉயர் எச்சரிக்கை நிலையில் உள்ளது.