இரண்டாம் உலகப்போரின் போது மாயமான நீர்மூழ்கி கப்பல் 71 உடல்களுடன் கண்டெடுப்பு

இரண்டாம் உலகப்போரின் போது மாயமான நீர்மூழ்கி கப்பல் 71 உடல்களுடன் கண்டெடுப்பு

இரண்டாம் உலகப்போரின் போது திடீரென மாயமான நீர்மூழ்கி போர்க்கப்பல் 73 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. கப்பலுடன் 71 சிப்பந்திகளின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், டிசம்பர் -28 மால்ட்டாவில் இருந்து நீர்மூழ்கி கப்பல் கிளம்பியது. இரண்டு இத்தாலி கப்பல்களை சிதைக்கும் நோக்கில் புறப்பட்ட இந்த கப்பலானது லா மடேலானாவில் உள்ள துறைமுகத்தில் நங்கூரம் போட்டு நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால், டிசம்பர் 31 ஆம் தேதி சிக்னல் அனுப்பிய பிறகு, கப்பல் எந்த ஒரு சுவடும் இல்லாமல் தீடிரென மாயமானது. இதனால், இந்த கப்பல் மூழ்கியிருக்காலாம் என்று ராணுவ அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர்.

இந்த நிலையில், 73 ஆண்டுகளுக்கு பிறகு, சார்டினியா கடலின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவான தாவோல்வாரா என்ற இடத்தில் சுமார் 100 மீட்டர் ஆழத்தில் டைவிங் குழுவினர் இந்த நீர்மூழ்கி கப்பலை கண்டறிந்துள்ளனர். 1290 டன் எடை கொண்ட இந்த கப்பலுடன் 71 உடல்களும் கண்டெடுக்கபப்ட்டுள்ளது. 71 பேரும் கப்பல் சிபந்திகளாக இருக்க கூடும் என்று தெரிகிறது.

வெடி விபத்தில் ஏற்பட்ட லேசான சேதம் மட்டுமே கப்பலில் உள்ளது. கப்பல் சிப்பந்திகள் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு மூச்சுத்திணறி பலியாகி இருக்கலாம் என தெரிவதாக டைவிங் குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். நீர்முழ்கி கப்பல் தங்கள் நிறுவனத்தினுடையதுதான என்பதை கண்டறிய எங்கள் குழு ஆய்வு செய்து வருவதாக ராயல் நேவி நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News