இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இறுதி எச்சரிக்கை
லோதா கமிட்டி பரிந்துரை எந்த நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக் கொள்வதாக உத்தரவாதம் அளிக்க ஒரே ஒருநாள் மட்டும் பிசிசிஐக்கு அவகாசம் தந்து உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தில் மேற்கொள்ள வேண்டிய நிர்வாக சீர்த்திருத்தங்கள் குறித்து நீதிபதி ஆர்.எம்.லோதா கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
ஆனால், அந்த பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை ஏற்க முடியாது என பிசிசிஐ பொதுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த மறுக்கும் பிசிசிஐக்கு கடும் கண்டனமும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
‘லோதா கமிட்டி பரிந்துரைகளை ஏற்காவிட்டால், உள்நாட்டு போட்டிகளை நடத்த முடியாது. லோதா கமிட்டி பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாக உறுதியளிக்க ஒருநாள் அவகாசம் அளிக்கிறோம்.
இன்று உத்தரவாதம் அளிக்காவிட்டால், பிசிசிஐ நிர்வாகிகளை கூண்டோடு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்படும், இதுவே இறுதி எச்சரிக்கை என கூறியுள்ளார்.