முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்க எதிர்ப்புத் தொழிற்சங்க ஊழியர்கள் ஆகியோரிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (26) மாலை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, தொழிற்சங்க ஊழியர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதேவேளை, கூட்டு எதிர்க் கட்சி எம்.பி.க்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.