உயர் சிறப்பம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்தும் சீன நிறுவனமான Xiaomi மற்றுமொரு புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
Xiaomi Mi Max 2 எனும் இக் கைப்பேசியானது 6.44 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 625 Processor இனையும் உள்ளடக்கியுள்ளது.
இவற்றுடன் பிரதான நினைவகமாக 4 GB RAM மற்றும் 64 GB அல்லது 128 GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.
தவிர சேமிப்பு நினைவகத்தினை microSD கார்ட்டின் உதவியுடன் 128 GB வரை அதிகரிக்கக்கூடிய வசதியும் உள்ளது.
மேலும் 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெரா, 5300 mAh மின்கலம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.
64 GB சேமிப்பகத்தைக் கொண்ட கைப்பேசியின் விலை 250 டொலர்கள் ஆகவும், 128 GB சேமிப்பகத்தைக் கொண்ட கைப்பேசியின் விலை 290 டொலர்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.