19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், ஸ்கொட்லாந்துடனான போட்டியில் தென் ஆபிரிக்க வீராங்கனை மெடிசன் லண்ட்ஸ்மேன் ஹெட்ரிக் விக்கெட்களை வீழ்த்தினார்.
19 வயதின் கீழ் உலகக் கிண்ணப் போட்டியில், ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.
18 வயதான மெடிசன் லண்ட்ஸ்மேன் சுழற்பந்துவீச்சாளர் ஆவார்.
தென் ஆபிரிக்காவின் பெனோனி நகரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் தனது 3 ஆவது ஓவரில் ஸ்கொட்லாந்து வீராங்கனைகள் மரியம் பைஸால், நியாம் முய்ர், ஓர்லா மொன்ட்கோமரி ஆகியோரை மெடிசன் லண்ட்ஸ்மன் ஆட்டமிழக்கச் செய்தார்.
இப்போட்டியில் தென் ஆபிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 112 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 17 ஓவர்களில் 68 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.
மெடிசன் லண்ட்ஸ்மேன் 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.