க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முதலாம் வாரத்தில் நடாத்தப்பட்டு, விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியும் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு, டிசம்பர் மாதத்துக்குள்ளேயே சகல நடவடிக்கைகளையும் நிறைவு செய்ய கல்வி அமைச்சு திட்டமிட்டு வருகின்றது.
இந்த திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு, பரீட்சை பணிகளில் ஈடுபடுத்தப்படும் சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்களை பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியிலும் கலந்துகொள்ளச் செய்ய கல்வி அமைச்சும், பரீட்சை திணைக்களமும் ஆராய்ந்து வருவதாகவும் கல்வி அமைச்சு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.