தேசிய ரீதியில் நடைபெற்று வரும் இவ்வருடத்துக்கான கல்விப் பொராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் (12) நிறைவடைகின்றது.
கடந்த 2 ஆம் திகதி ஆரம்பமான இப்பரீட்சைக்கு பாடசாலை மூலமான விண்ணப்பதாரிகள் 433,050 பேரும் தனியார் விண்ணப்பதாரிகள் 283,958 பேரும் என மொத்தமாக 71 7008 பேர் நாடெங்கிலும் இப்பரீட்சைக்குத் தோற்றுவதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்திருந்தார்.
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,987 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெற்றதாகவும், இப்பரீட்சைக்கான இணைப்பு நிலையங்களாக 541 நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

