போர் முடிவடைந்து 14 வருடங்கள் ஆகப் போகின்றன. ஸ்ரீலங்கா அரசு தமிழர்களுக்கு நீதியையும் தரவில்லை. தீர்வையும் தரவில்லை. ஏமாற்றங்களையே தந்து கொண்டிருக்கிறது.
இந்தியா, அமெரிக்கா, இகனடா என்று பல நாடுகள் தீர்வை முன்வைக்க நிர்பந்தித்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் நேரடியாகவும் சர்வதேச நாணய நிதியம் மறைமுகமாகவும் நிர்பந்தித்து வருகிறது.
சுதந்திர தினத்தில் தமிழர்களுக்கு தீர்வு அறிவிப்பேன் என்று சொன்ன ரணில் அன்றும் வெறுகதை பேசி தமிழ் மக்களை பேக்காட்டி உள்ளமை பெரும் மோசமான செயலாகும்.

இந்த நிலையில் பழ நெடுமாறன் அவர்கள், தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளதாகவும் விரைவில் மக்கள் முன் தோன்றி போராட்டத்தை முன்னெடுப்பார் என்றும் அறிவித்துள்ளார்.
இந்த தகவல் தமிழ்நாட்டில் மாத்திரமின்றி இலங்கையிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் பிரபாகரன் பக்கம் திரும்பியுள்ளது.
ஈழத் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் உரிமையை மறுத்து, இனப் படுகொலையை தொடர்ந்து முன்னெடுக்க நினைக்கும் இலங்கை அரசிற்கு தலைவர் பிரபாகரனின் வழியும் மொழியும்தான் பதில் அளிக்க சரியானது.
எனவே தலைவர் அவர்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்பதே ஈழத் தமிழ் மக்களின் மனங்களிலும் உள்ள ஏக்கம். அவர் உயிருடன் இருந்தால் அதுவே ஈழ விடுதலைக்கு வழி சமைக்கும்.
கிருபா பிள்ளை