“வடக்கு கிழக்கை சிதைத்து தமிழ் மக்களின் தாயகத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் வகையில் அதிர வைக்கும் சதியை நிறைவேற்ற ஸ்ரீலங்கா அரசு முயல்கிறது. இதற்கு இந்தியாவை துணைக்கழைக்கவும் முயற்சிகள் நடக்கிறது. இதனை உடன் ஒற்றுமையுடன் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை ஈஸி24நியூஸ் வலியுறுத்துகிறது…”
ஸ்ரீலங்கா அரசு புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. புதிய அரசயிலமைப்பின் வாயிலாக நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கப் போவதாக கூறினாலும் நாட்டில் உள்ள தமிழ் மக்களை இல்லாமல் செய்யவே இந்த சதி நடக்கிறது.
புதிய அரசியலமைப்பில் வடக்கு மாகாணத்தை அனுராதபுரத்தை உள்ளடக்கி திருத்தம் செய்யப்படவுள்ளது. இதன் வாயிலாக வடக்கு மாகாணத்தின் இனவிகிதாசாரத்தை மாற்றி வடக்கில் பெரும்பான்மை இனத்தின் அரசியலை நுழைக சதிக்கு திட்டம் இடப்படுகிறது.
அதேபோல கிழக்கு மாகாணத்தை முற்றாக மாற்றி திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை சிங்கள மாவட்டங்களுடன் இணைத்து புதிய மாகாணத்தை உருவாக்கவும் திட்டம் தீட்டப்படுகிறது.
எனவே இதனை வடக்கு கிழக்கு தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும். அதிர வைக்கும் இந்த சதியை முறியடிக்க தமிழ் தலைமைகள் அனைவரும் ஓரணியில் நின்று இலங்கைக்கு இடித்துரைக்க வேண்டும். இந்தியாவுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
இல்லையேல், வடக்கு கிழக்கு தாயகம் முற்றாக துண்டு துண்டாக சிதைக்கப்பட்டு தமிழ் இனமும் இல்லாமல் செய்யப்படும் அபாயம் உள்ளது. எனவே இப்போது தலைமைகள் ஒன்றுபட்டு செயல் பணியை புரிய வேண்டும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]