கனடாவின் துணைப் பிரதமராகவும், நிதியமைச்சராகவும் இருக்கும் கிறிஸ்டியா ப்ரீலேண்ட் (Christina Freeland) ஆகஸ்ட் 2, 1968 இல் பீஸ் ரிவர், அல்பர்ட்டாவில் பிறந்தவர். இவரின் தந்தை டொனால்ட் ப்ரீலண்ட் ஒரு வழக்கறிஞர். அவரது தாயார் ஹலினா சோமியாக் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர். இவரும் வழக்கறிஞராக இருந்தவர். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 78 நாளாகிறது.
இந்நிலையில் உக்ரேனிய மக்களுக்காக பலவகையில் உதவிகள் செய்து வருகிறார் கிறிஸ்டியா ப்ரீலேண்ட். உக்ரைனுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்து தருவது, அங்கிருக்கும் மக்களை கனடாவில் உள்வாங்குவது போன்ற பல உதவிகளை செய்து வருகிறார்.
கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) என அழைக்கப்படுபவர் கனடிய அரசியல்வாதியும், லிபரல் கட்சி உறுப்பினரும் ஆவார். இவர் மனித உரிமை வழக்கறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கனடாவின் நடாளுமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட இவர் ஒரு ஈழத்தமிழர்.
தற்போது இலங்கையில் நடந்து வரும் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் குறித்து அனைவரும் அறிந்திருக்கலாம். இக்கட்டான இந்த சூழ்நிலையில் இலங்கை மக்களுக்காக கரி ஆனந்தசங்கரி தனிப்பட்ட முயற்சி எடுத்து ஏதேனும் செய்வார் என்ற நம்பிக்கையில் பல இலங்கை மக்கள் உள்ளனர். செய்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்….