சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்ட ஊடகவியளாலரும் இலங்கை யுத்தம் தொடர்பில் பல நூல்களை எழுதியுள்ள எழுத்தாளருமான பிரான்சிஸ் ஹாரிசன் தீபச்செல்வனின் நடுகல் நாவலின் ஆங்கில மொழியாக்கத்தை படிக்க ஆர்வமாக உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தீபச்செல்வனின் நாவலை படிக்க வேண்டும் என யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் இயக்குனரும் 2000-2004 வரையிலான நோர்வேயின் மத்தியஸ்த சமாதான நடவடிக்கையின் போது கொழும்பில் பி.பி.சி. யின் ஊடகவியலாளராகவும் பணியாற்றிய பிரான்சிஸ் கரிசன் ஆவல் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்தப் புத்தகம் (நடுகல்) சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதைப் படிப்பவர்கள் பெரும் தாக்கத்தை உள்ளாகுவதாக கேள்விப்படுகிறேன், மேலும் இலங்கையில் 2009 இறுதிப் போரில் வன்னியில் இருந்த தமிழர்களுக்கு எப்படி இருந்தனர் என்பதை நன்றாகப் புரிந்துகொள்வதால் அதை ஆங்கிலத்தில் படிக்க ஆர்வமாக உள்ளேன்! இத்தகைய முயற்சிகள் இன்றியமையாதவை…” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பேனா முனை போதும் இந்தப் பிரபஞ்சத்தை அசைத்துப்பார்க்க என்பதற்கு தீபச்செல்வன் உதாரணமாகியுள்ளார். ஒரு இனத்திற்கு ஏற்பட்ட காயத்தை வலியை மூடிமறைத்து அந்த இனத்தையே அழித்துவிட துடிக்கும் இப் பெரும் காலத்தில், தன் பேனா முனையால் அவ்வினத்தின் வலியை உலகின் அத்தனை இனமும் உணர, அறியத் துடிக்க ஆவலை ஏற்படுத்தி எழுத்துக்களால் தீபச்செல்வன் செய்யும் புரட்சி போற்றுதற்குரியது என்றும் இவ் விடயம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது.
சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நடுகல் நாவலுக்கு தென்னிலங்கையில் பெரும்வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்த விடயம் ஈழத்து படைப்பிலக்கியமொன்றின் அதியுச்ச அடைவு என்றும் லண்டனில் உள்ள தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நடுகல் நாவலை இந்திய மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறார். கடந்த ஓராண்டு காலமாக மொழியாக்க பணி நடைபெற்று வரும் நிலையில், 2023ஆம் ஆண்டு இந்திய பதிப்பகம் ஒன்றின் வாயிலாக நடுகல் ஆங்கில மொழியாக்கம் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]