யாழ். மாணவி வித்யாவின் கொலை விசாரணையின் தொடராக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை மஜிஸ்ட்ரேட் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மாணவி படுகொலை வழக்கில் சந்தேகநபரைத் தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டின் பேரிலேயே லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று (15) மாலை ஊர்காவற்றுறை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.