Easy 24 News

Cinema

Tamil cinema, World Cinema News

யாத்திசை – விமர்சனம்

தயாரிப்பு: வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் & சிக்ஸ் ஸ்டார் என்டர்டெய்ன்மென்ட் நடிகர்கள்: சக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சுபத்ரா மற்றும் பலர். இயக்கம்: தரணி ராஜேந்திரன் மதிப்பீடு: 3/5 சோழர்களின் வரலாற்றை...

Read more

திரைத்துறையில் பெண்களுக்கான போராட்டம் எப்போதுமே கடினமானது – ஐஸ்வர்யா ராஜேஷ்

'காக்கா முட்டை' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து தன் திறமையை நிரூபித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கலைப்படங்கள்.. கமர்சியல் படங்கள்.. என வித்தியாசம் பார்க்காமல் தன்...

Read more

திட்டமிட்டபடி வெளியாகுமா சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’?

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்று... அதனை தக்க வைத்துக் கொள்வதற்காக தொடர்ந்து போராடிவரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படமான 'மாவீரன்',...

Read more

அசோக்செல்வன் நடிக்கும் ‘போர் தொழில்’ படத்தின் டைட்டில் லுக் வெளியீடு

அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய படத்திற்கு, 'போர் தொழில்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.   அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில்...

Read more

டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘ஆதி புருஷ்’

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் ஜூன் 13ஆம் திகதியன்று பிரபாஸ் நடித்திருக்கும் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படம் பிரத்யேகமாக திரையிடப்படுகிறது.  பிரம்மாண்டமான படைப்பாக தயாராகி...

Read more

மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

மலையாள சுப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் தயாராகி வரும் 'மலைக்கோட்டை வாலிபன்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.  இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘ ‘மலைக்கோட்டை வாலிபன்’. மலையாள சுப்பர்ஸ்டார் மோகன்லால் கதையின் நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் ஏனைய இந்திய திரையுலகினைச் சேர்ந்த முன்னணி நட்சத்திர கலைஞர்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு பி. எஸ். ரஃபீக் திரைக்கதை எழுத, மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்ய, பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார்.  சரித்திர காலகட்டத்திய படைப்பாக தயாராகி வரும் இந்த படத்தை ஜோன் மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி பிலிம்ஸ் மற்றும் மேக்ஸ் லேப் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஷிபு பேபி ஜோன், கொசுமோன் மற்றும் அனுப் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் 18ம் திகதி முதல் வட இந்திய மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மாரில் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில்  அனல் பறக்கும் கோபக்கனலோடு மோகன்லால் தோன்றுவதால்  ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாராகி வரும் 'மலைக்கோட்டை வாலிபன்' மலையாள மொழியில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற முக்கிய மொழிகளிலும் வெளியாகிறது.

Read more

ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ பட பாடல் வெளியீடு 

தமிழ் திரையுலகில் திறமையான நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஆர்யாவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்' படத்தில் இடம்பெற்ற 'டவுலத்தான ரவுடி..' எனத் தொடங்கும்...

Read more

ஜூனில் வெளியாகும் சமுத்திரகனியின் ‘விமானம்’

தென்னிந்திய திரையுலகின் சிறந்த குணசித்திர நடிகரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படமான ‘விமானம்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக காணொளியை வெளியிட்டு படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இயக்குநர் சிவபிரசாத் யானலா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் விமானம். இதில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், 'நான் கடவுள்' ராஜேந்திரன், அனுசுயா பரத்வாஜ், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள். விவேக் கலேபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சரண் அர்ஜுன் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடி படைப்பாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை கே கே கிரியேட்டிவ் வொர்க்ஸ் சார்பில் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும்  தயாரிப்பாளர் கிரண் கோர்ராபாரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியிடப்பட்டிருக்கும் காணொளி.. பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் எதிர் வரும் ஜுன் மாதம் 9 ஆம திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘விமானம்’ என தலைப்பிடப்பட்டிருப்பதாலும், விமானப்பயணம் பற்றிய குழந்தையின் கனவைப் பற்றி படம் பேசுவதாலும், இந்த படம் ‘சூரரைப் போற்று’ படத்தைப் போல் தரமான படைப்பாக இருக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

Read more

மாதவன் நடிக்கும் ‘டெஸ்ட்’ படத்தின் தொடக்க விழா

நடிகர் மாதவன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு, 'டெஸ்ட்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது படத்திற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளரான சசிகாந்த் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் முதல் திரைப்படம் 'டெஸ்ட்' இதில் நடிகர்கள் மாதவன், சித்தார்த் கதையின் நாயகர்களாகவும், நடிகை நயன்தாரா சிறப்பு தோற்றத்திலும் நடிக்கிறார்கள். ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் துடுப்பாட்டத்தை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை வை நாட் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி தயாரிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டது. மே மாதம் முதல் வாரம் இப்படத்தின் படபிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 'டெஸ்ட்' எனும் இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகர் மாதவன் இதற்கு முன் 2003 ஆம் ஆண்டில் வெளியான 'பிரியமான தோழி' திரைப்படத்தின் துடுப்பாட்ட வீரராக நடித்திருந்தார். அதன் பிறகு இருபது ஆண்டுகள் கழித்து துடுப்பாட்டத்தை மையப்படுத்திய இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் அவர் துடுப்பாட்ட வீரராக நடிக்கிறாரா? அல்லது பயிற்சியாளராக நடிக்கிறாரா? அல்லது நடுவராக நடிக்கிறாரா? என்பது புரியாத புதிராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

விஜய் அண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

விஜய் அண்டனி கதையின் நாயகனாக  நடித்திருக்கும் 'பிச்சைக்காரன் 2' படத்தில் இடம்பெற்ற 'கோவில் சிலையே..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல்...

Read more
Page 89 of 707 1 88 89 90 707