Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கனேடிய பொதுத் தேர்தல் | மூன்றாவது முறையாகவும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ

September 21, 2021
in News, World
0
கனேடிய பொதுத் தேர்தல் | மூன்றாவது முறையாகவும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக அந் நாட்டுச் செய்திச் ச‍ேவையான சி.பி.சி. தெரிவித்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ட்ரூடா மூன்றாவது முறையாகவும் தொடர்ச்சியாக கனடாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்தல் வெற்றிகள் இன்னும் உறுதிபடுத்தப்படாத நிலையில், அதிகாரிகள் தொடர்ந்தும் வாக்குகளை கணக்கிட்டு வருகின்றனர்.

சி.பி.சி. செய்திச் சேவை திங்கள்கிழமை தாமதமாக, லிபரல் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று அறிவித்தது. எனினும் சிறுபான்மை அரசாங்கம் அமைக்கப்படுமா அல்லது பெரும்பான்மை அரசங்கம் அமைக்கப்படுமா என்பதை தெளிவாக கூறவில்லை.

இதனிடையே பல கனேடிய ஊடகங்கள், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளது. கனேடிய பாராளுமன்ற தேர்தலில் ஒரு கட்சி பெரும்பான்மையை வெல்ல 338 இடங்களில் 170 இடங்களைப் பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

***

கனடா மக்களின் மனங்களில் பெரு அபிமானத்தை வென்ற ஜஸ்டின் ட்ரூடோ அவர்களுக்கு ஈஸி24நியூஸ் தனது இதயம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. குறிப்பாக கனேடியத் தமிழர்கள்மீது பேரன்பு கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள், தாயகத்தில் உள்ள தமிழ் மக்களுக்காகவும் அவர்களின் நீதி மற்றும் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வரலாற்றுச் சிறப்பு மிக்க கனேடியத் தலைவராக இடம் பிடித்துள்ளார்.

கிருபா சங்கரசிவம்பிள்ளை 


http://Facebook page / easy 24 news

Previous Post

நல்லதோர் லய ஞானக் கலைஞனை இழந்தோம் | முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கன் இரங்கல்

Next Post

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 509 பேர் கைது

Next Post
37 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 509 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures