“சினிமா விமர்சனம் என்ற போர்வையில் நல்ல திரைப்படங்களை மிக மோசமான தன் சுய வெறுப்புக்களை வெளியிடும் புளுசட்டை மாறனுக்கு என் கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்கிறேன்…”
அடிப்படையில் நான் ஒரு ரசிகன். அதிலும் கடந்த பல தசாப்தங்களாக திரைப்படங்களை தவறாமல் பார்த்து ரசித்து வருகிறேன். நல்ல திரைப்படங்களை கொண்டாட வேண்டியதும் நல்ல ரசனை கருத்துக்களை பகிர்வதும் ரசிகனின் வெளிப்பாடு.
இந்த நிலையில் புளுசட்டை மாறன் தொடர்ச்சியாக நல்ல திரைப்படங்களுக்கு எதிராக வேண்டுமென்றே மோசமான கருத்துக்களை சூட முற்பட்டு தோல்வி கண்டு வருகிறார்.
இதற்கு அண்மையில் வெளியாக சில திரைப்படங்களுக்கு புளுசட்டை மாறன் மேற்கொண்ட அவதூறுகளை எடுத்துக்காட்டாக சொல்லாலம் என்று நினைக்கிறேன். அதில் ஒன்று அஜித் நடித்த வலிமை திரைப்படம். சிறந்த அத் திரைப்படத்திற்கு மக்கள் பேராதரவு வழங்கியுள்ளனர்.
அதற்கு அடுத்து தனுஷ் நடித்த மாறன். அதுவும் சிறந்த திரைப்படம். தற்போது சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் மிகச் சிறந்த விழிப்புணர்வுப் படம். அதிலும் பெண்களை காக்கும் விழிப்புணர்வை துணிவாக சொல்லுகின்ற படம்.
ஆனால் மேற்கண்ட மூன்று திரைப்படங்களையும் கண்ணை மூடிக்கொண்டு திரைப்படத்தை ரசிக்கத் தெரியவராய் மிக மோசமாக சகட்டு மேனிக்கு கருத்துச் சொல்லுகிறார் புளு சட்டை மாறன்.
இவைகளை பார்க்கும் போது இவர் யாருடைய கைக்கூலி என்றே கேட்கத் தோன்கிறது. நல்ல திரைப்படங்கள்மீது சிறந்த நடிகர்களின் திரைப்படங்கள்மீது சேறு பூசும் இவர் நிச்சயமாக எவரோ ஒரு தரப்பின் கைக்கூலி என்று உறுதியாக தெரிகிறது.
-கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]