கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக தற்போது நாட்டில் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் என்பன முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவ் தொற்றுநோய் காரணமாக பெண்கள் சிறுவர்கள் என அனைவரும் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் ,இந்த நேரத்தில் தேர்தல் நடத்துவது தவறானதாகும் என முன்னாள் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார் .
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாவட்டத்தின் நகரிலுள்ள தயா கமகேயின் அலுவலகத்தில் நடைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார் .
இதில் முன்னாள் பெற்றோலிய வள இராஜாங்க அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அனோமா கமகே கருத்து தெரிவிக்கையில்
பாடசாலைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் ஒரு இடத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்னொரு இடத்தில் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் அரசாங்கம் தேர்தல் ஒன்றை நடத்துவது பற்றி யோசிக்கின்றது இது தவறாகும். முதலில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

