Tuesday, September 16, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மனித உரிமைகள் ஆணைக்குழு முறைப்பாடுகளை ஏற்பு!

May 11, 2020
in News, Politics, World
0

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம் கடந்த ஏப்ரல் வெள்ளிக்கிழமை (20) முதல் மறு அறிவித்தல் வரும்வரை மூடப்பட்டிருந்த நிலையில் திங்கட்கிழமை முதல் நேரடியாக முறைப்பாடுகளை ஏற்பதற்கு தயாராகி வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப் தெரிவித்தார்.

கடந்த மாதம் அலுவலகம் மூடப்பட்ட காலப்பகுதியில் மனித உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகளை 1996 என்ற இலக்கம் மற்றும் பதிவு செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பிலான நடவடிக்கை இலகுபடுத்துவதற்காக புதிய தொலைநகல் 0672229728 எனும் இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இருந்த போதிலும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி எமது ஆணைக்குழு தற்போது நேரடியாக முறைப்பாடுகளை ஏற்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.எனவே மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் அடிப்படை உரிமை மீறல்களுக்கு முகம் கொடுத்தவர்கள் எவரும் நேரடியாக எமது அலுவலகத்திற்கு சமூகமளித்து முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவித்தார்.
கொவிட்-19 கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் பீடித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்படி அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களையும் மூடுமாறும் வீடுகளில் இருந்து அலுவலக பணிகளை செய்யுமாறும் கடந்த தினங்களில் அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகமும் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையில் மூடப்பட்டு பின்னர் பகுதி அளவில் இயங்க தொடங்கியது.இருப்பினும் 1996 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பொது மக்கள் தமது முறைப்பாடுகளை பதிவு செய்த நிலையில் மேலும் பதிவு செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பிலான நடவடிக்கை இலகுபடுத்துவதற்காக புதிய தொலைநகல் 0672229728 எனும் இலக்கத்தை அறிமுகம் செய்து முறைப்பாடுகளை இவ்விரு வழிமுறைகளின் ஊடாக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மக்கள் கூட்டமாக வீதியில் நடமாடுவதை நாம் விரும்பவில்லை

Next Post

அதிக விலையில் விற்க்கப்படும் நன்னீர் மீன்கள்

Next Post

அதிக விலையில் விற்க்கப்படும் நன்னீர் மீன்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures