போக்குவரத்து குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை செலுத்தும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களி்ல் உள்ள சாரதிகளுக்கு காவல்துறையினரால் வழங்கப்பட்டுள்ள தண்டப்பணம் செலுத்துவதற்கான பற்றுச்சீட்டுக் காலம் மே 2 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டவுடன் தண்டப்பணம் செலுத்துவதற்கான காலம் அறிவிக்கப்படும் என தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

