கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும் – தனி நபர்கள் ,புலம்பெயர் உறவுகள் என உதவி நடவடிக்கையில்இறங்கிய வேளை, தனிநபர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய “நமக்காக நாமாவோம்” வாட்ஸ் அப் குழு மக்களுக்கு வேண்டிய உதவிகளை இனம் கண்டு செய்ததோடு விழிப்புணர்வு நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது .
பத்துக்கும் மேற்பட்ட கட்டங்களாக, சுழற்சி முறையிலான உதவிகளை ,பெண் தலைமைத்துவ குடும்பங்கள் ,விசேட தேவை உடையோர் ,வயோதிபர்கள் என கிராமங்களின் முக்கிய நபர்களை தொடர்பு கொண்டு இந்த சேவையை வழங்கி வருகின்றனர் .


