கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவர் கொரோனா தொற்றுடன் நேற்றிரவு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கடந்த மாதம் இந்தியா சென்று நாடு திரும்பியவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, அப்பகுதியில் வசிக்கும் சிலரைத் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

