Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் முகாமைத்துவ குழு கூடியது

April 16, 2020
in News, Politics, World
0

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தை முகாமைத்துவம் செய்யும் முகாமைத்துவ குழு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூடியது. மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யு. லக்ஷ்மன் இக்குழுவிற்கு தலைமைவகிக்கின்றார்.

ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமை நிதி அதிகாரி ரவிந்திர ஜே.விமலவீர நிதியத்தின் செயலாளராக உள்ள அதேநேரம் அமைச்சுக்களின் செயலாளர்கள், நிறுவனத் தலைவர்கள் உள்ளிட்ட 16பேர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

நிதியத்திற்கு பல்வேறு தரப்பிடமிருந்து நிதி உதவிகள் கிடைக்கப்பெற்று வருகின்றன. இந்த நிதியத்தை தாபித்ததன் மூலம் ஜனாதிபதி எதிர்பார்த்த நோக்கத்தை அடைந்துகொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக குழு கலந்துரையாடியது.

கொரோனா ஒழிப்புக்கு தேவையான மருந்துகள், மருத்துவ ஆராய்ச்சி உபகரணங்கள் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு வசதிகளுக்காக நிதித் தேவைகளை வழங்குதல், சுகாதாரத் துறையிலும் அத்தியாவசிய மக்கள் சேவைகளை வழங்குவோரினதும் சுகாதார பாதுகாப்பு, சிறுவர்கள், பெண்கள், குறைந்த வருமானம் பெறும் வயோதிபர்கள், மாற்றுத்திறனாளிகள், இடர்நிலைக்குள்ளாகக் கூடியவர்களுக்காக நிதித் தேவைகளை வழங்குவது நிதியத்தின் நோக்கமாகும்.

WHO, UNICEF, UNDP, WB, ADB மற்றும் இலங்கையின் முக்கிய அபிவிருத்தி பங்காளிகள், முகவர் நிறுவனங்களுடன் நிதி சேகரிப்பதை ஒருங்கிணைப்பதும் நிதியத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

நிறுவன மற்றும் தனிப்பட்டவர்களிடமிருந்து கிடைக்கும் அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது சுமார் 655 மில்லியன் ரூபாயினை அடைந்துள்ளது.

ரக்னா பாதுகாப்பு நிறுவனம் அன்பளிப்பு செய்த 3மில்லியன் ரூபாய், அபி வெனுவென் அபி நிதியத்தின் தென் கொரிய கிளை அன்பளிப்பு செய்த 4மில்லியன் ரூபாய் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

NDB வங்கி 07 மில்லியன் ரூபாய், லங்கா ஹொஸ்பிடல் கோபரேஷன் 6.7 மில்லியன் ரூபாய், கொமர்ஷல் வங்கி 10 மில்லியன் ரூபாய், கலம்பு டொக்யார்ட் பீஎல்சி நிறுவம் மற்றும் டீ.ஜே.ஏ சமரசிங்க தலா 05 மில்லியன் ரூபாய், நகர அபிவிருத்தி அதிகார சபை 2.5 மில்லியன் ரூபாய், இலங்கை பட்டய மனித வள முகாமைத்துவ நிறுவனம், இலங்கை உயர் தொழிநுட்ப கற்கைகள் நிறுவனம் மற்றும் சமன் இன்டஸ்ட்ரீஸ் என்ட் சப்லயர்ஸ் தனியார் நிறுவனம் தலா ஒரு மில்லியன் ரூபாயும் இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபை 02 மில்லியன் ரூபாயும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

BASF லங்கா தனியார் நிறுவனம் 05 லட்சம் ரூபாய், நுகேகொட டபிள்யு. மஞ்சுல பொதேஜு ஒரு லட்சம் ரூபாய், ரஞ்சன் டி சில்வா 02 லட்சம் ரூபாய், இலங்கை பொலிஸ் அங்கவீனமுற்ற படைவீரர்கள் சங்கம் 60000 ரூபாய் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும்.

சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

0112354479/0112354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலேவினை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

Previous Post

19 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!

Next Post

அரச மற்றும் தனியார் துறை பணிகளை ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம்!

Next Post

அரச மற்றும் தனியார் துறை பணிகளை ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures