காத்திருப்புப் பட்டியலிலுள்ள சமுர்த்திப் பயனாளிகளுக்கான 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளன.
இதற்குத் தேவையான நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
கிராம மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் நாட்களில் கிராம மட்டத்தின் பரிந்துரைக்கமைய, பாடசாலை வான் உரிமையாளர்கள், ஓட்டோ சாரதிகள் மற்றும் சுய தொழலில் ஈடுபடுவோருக்கும் கொடுப்பனவை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணி மேலும் தெரிவித்துள்ளது.

