Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புத்தளத்தில் 50 பேர் மாயம்; பாதுகாப்புத் தரப்பு தேடுதல்

April 10, 2020
in News, Politics, World
0

புத்தளம் – ரத்மல்யாய, அல்காசிம் வீட்டுத் தொகுதியிலிருந்து அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன், மன்னாரில் இறுதிக் கிரியையொன்றில் பங்குபற்றிய 50 பேரைத் தேடி வருவதாகப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் பாதுகாப்புத் தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேஷியாவில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் பங்குபற்றிய நிலையில், மார்ச் மாதம் 16ஆம் திகதியன்று நாடு திரும்பியிருந்த 61 வயதுடைய நபரொருவருடன், மன்னார் பிரதேசத்தில் இடம்பெற்ற மரண வீடொன்றுக்குச் சென்றிருந்த மேற்படி 50 பேரும், தற்போது தலைமறைவாகியுள்ளனர் என்றும், இவர்களைத் தேடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் புத்தளம் மாவட்ட பொதுச் சுகாதாரப் பணிப்பாளர் என்.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷியாவிலிருந்து வந்திருந்த மேற்படி நபர், சுகாதாரத் தரப்பினரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவரது வீட்டுக்குள்ளேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். 21 நாட்களுக்குப் பின்னர் அவருக்குப் பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்றியிருப்பது உறுதியானது.

இதையடுத்து, அவர் நெருங்கிப் பழகியவர்கள் மற்றும் அவருடன் மன்னாருக்குச் சென்றவர்கள் தொடர்பில் தேடிப்பார்த்தபோது, அவர்கள் அனைவரும், அப்பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிகள், தற்போது மும்முரமாக இடம்பெற்று வருவதாகப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் பாதுகாப்புத் தரப்பினரும் தெரிவித்தனர்.

Previous Post

கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த கைதி தப்பியோட்டம்

Next Post

இராணுவத்தால் நாட்டை ஆள முடியாது – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

Next Post

இராணுவத்தால் நாட்டை ஆள முடியாது - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures