களுத்துறை மாவட்டம், பேருவளையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
பேருளை – மாளிகாஹேன பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணொருவர், நேற்று (09) இனங்காணப்பட்டதையடுத்து இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
குறித்த பெண்ணின் உறவினர்கள் 20 பேரைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

