Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆயிரம் பேர் சுய தனிமைப்படுத்தலில்!

April 5, 2020
in News, Politics, World
0

வௌிநாடுகளில் இருந்து வருகை தந்த சுமார் ஆயிரம் பேர் தொடர்ந்தும் தமது கண்காணிப்பின் கீழ் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து வௌியேறியதன் பின்னர், வீடு திரும்பியவர்களே இவ்வாறு சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து வௌியேறிய ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால், தங்களின் வீடுகளுக்குள்ளேயே சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும்  அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய, தனிமைப்படுத்தும் நிலையங்களிலிருந்து அனுப்பி வைக்கப்படுவோர் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுவது கட்டாயமானதாகும் எனவும் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கத் தயாராக உள்ளதாகவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஏதேனும் சிக்கல் நிலை ஏற்படும் பட்சத்தில், உடனடியாக தங்களின் பிராந்தியத்துக்குப் பொறுப்பான அதிகாரிக்கு அறிவிக்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

கொழும்பில் நிர்க்கதியானவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு

Next Post

தாயைக் கொலைசெய்த மகன் – திருமலையில் கொடூரம்

Next Post

தாயைக் கொலைசெய்த மகன் - திருமலையில் கொடூரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures