ஏப்ரல் 30 ஆம் திகதிக்குப் பின்னர் புதிய நாடாளுமன்றம் கூடும் வரை நிதியைச் செலவிடும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளுக்காக நாடாளுமன்றத்தை மீளக் கூட்ட வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இடைக்கால கணக்கறிக்கை மூலம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அன்று முதல் புதிய நாடாளுமன்றம் கூடும் வரை எவ்வித நிதியையும் செலவிடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. புதிய நாடாளுமன்றத்தை எப்போது கூட்ட முடியும் என்பதைக் கூற முடியாது. இது நெருக்கடி நிலை. பழைய நாடாளுமன்றத்தை மீளக் கூட்டி தேவையான நிதியை பெறுவதன் மூலமே இந்த நெருக்கடியைத் தவிர்க்க முடியும்” – என்றார்.

