Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனாவைக் கட்டுப்படுத்த கோட்டாபயவால் விசேட நிதியம்

March 24, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதைக் கட்டுப்படுத்தல் மற்றும் அதனுடன் இணைந்த சமூக நலன்பேணல் நடவடிக்கைகளை இலகுபடுத்தும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட நிதியமொன்றை நிறுவியுள்ளார்.

அந்த நிதியம் ‘கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி நிதியம் அதற்காக 100 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையில் தனியாக விசேட கணக்கொன்று இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கணக்கு இலக்கம் 85737373 ஆகும்.

தேசிய, சர்வதேச நன்கொடையாளர்கள் சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்துக்குப் பணம் மூலம் பங்களிக்க முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்துக்குச்  செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியை வைப்பிலிட முடியும்.

சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் முகாமைத்துவம் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் நிதி மற்றும் வங்கித் துறையின் உயர் திறன்களுடன் தொழில்வல்லுநர்களைக் கொண்ட பணிக்குழாம் ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்படும்.

அமைச்சுக்களின் செயலாளர்கள், சுகாதாரப் பணிப்பாளர் நாயகம், கணக்காய்வு நிபுணர்கள் மற்றும் வங்கித் தலைவர்கள் முகாமைத்துவ சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முகம்கொடுத்துள்ள தற்போதைய சவால்களுக்கு மத்தியில் மனிதாபிமான உணர்வுடனும் சகோதரத்துவத்துடனும் அதனுடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசிய, சர்வதேச நிறுவனங்களும் நிதியத்துக்குப் பங்களிப்பதன் மூலம் சுகாதார, சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்த பங்காளர்களாவதற்கும் மனிதாபிமான பணியின் மூலம் அனைத்து பிரஜைகளையும் கவனிக்கவும் கிடைத்த விசேட சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர நம்பிக்கை தெரிவித்தார்.

வெளிநாட்டு அரசுகள், சர்வதேச நிதி நிறுவனங்கள், இலங்கையின் முன்னணி தேசிய, சர்வதேச கம்பனிகள் இதில் முக்கிய பங்கை எடுத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2004 ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போதும் 2009 மனிதாபிமான நடவடிக்கையின்போதும் எமது நாட்டில் அனைத்து மக்களும் எழுந்திருந்தது இவ்வாறேயாகும் என்றும் அவர் குறிப்பிட்டார் – என்றுள்ளது.

Previous Post

அடுத்த இரு வாரங்களுக்கு வடக்கு மக்களே மிக அவதானம்! – மருத்துவர்கள் எச்சரிக்கை

Next Post

கொரோனாவைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடாதீர்கள் – ரணிலுக்கு மஹிந்த பதிலடி

Next Post

கொரோனாவைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடாதீர்கள் - ரணிலுக்கு மஹிந்த பதிலடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

போர் வீரர்கள் நினைவிடத்தில் பதற்றம் : விமல் வீரவங்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

இலங்கைக்குள் வரப்போகும் விடுதலைப் புலிகளின் கறுப்புப் பணம் : எச்சரிக்கும் விமல் வீரவன்ச!

July 6, 2026
யோகி பாபு வெளியிட்ட ‘திரள்’ பட முதல் தோற்றப் பார்வை

பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கும் யோகி பாபு

July 6, 2026
எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

July 5, 2026
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

July 5, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures