Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாம் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு கொரோனாவை இல்லாதொழிப்போம் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

March 23, 2020
in News, Politics, World
0

எமது நடத்தையின் ஊடாக மாத்திரமே கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும். நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட வகையில் பொறுப்புணர்வுடன் செயற்படுவதன் ஊடாக இந்தச் சவாலை வெற்றிகொள்ள முடியும்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“உலகம் முழுவதும் பரவி, தற்போது இலங்கையிலும் பரவ ஆரம்பித்திருக்கும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதன்படி தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அரசின் செயற்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதுடன் சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார சேவையாளகளின் ஆலோசனைகளைப் பின்பற்றி நடக்கவேண்டும்.

அதேபோன்று முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட அரச அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

இன்னமும் இந்தத் தொற்றுநோயின் பாரதூரத்தன்மையைப் புரிந்துகொள்ளாமல் சில தரப்பினர் செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

எமது நடத்தையின் ஊடாக மாத்திரமே வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும். நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட வகையில் பொறுப்புணர்வுடன் செயற்படுவதன் ஊடாக இந்தச் சவாலை வெற்றிகொள்ள முடியும்” – என்றுள்ளது.

Previous Post

தொலைபேசிக் கட்டணம் செலுத்த ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய கால அவகாசம்!

Next Post

வங்கிகளை திறந்து வைக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது

Next Post

வங்கிகளை திறந்து வைக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures