வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய 5 மாவட்டங்களிலும், அதேவேளை, கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அன்று பிற்பகல் 2 மணிக்கு அம்மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் நாளை திங்கட்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்படுவதுடன், மீண்டும் நாளை பிற்பகல் 2 மணி முதல் அமுல்படுத்தப்படும். இம்மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
வடக்கில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டதையடுத்து ஏனையோரை அதிலிருந்து பாதுகாக்கும் வகையில் இம்மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களுக்கும் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

