கொரோனா வைரஸ் ஆபத்தையடுத்து இந்தியாவுக்கு யாத்திரை மேற்கொண்ட 210 இலங்கைப் பிரஜைகள் நேற்று நாடு திரும்பினர்.
நாடு திரும்பிய அனைத்து யாத்திரிகர்களும் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 170 பேர் இரணைமடு இராணுவத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அதேவேளை, முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு விமானப்படைத் தளத்தில் 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
இவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதுவரை வௌிநாடுகளில் இருந்து வருகை தந்த மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் 22 தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

