Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ். உள்ளிட்ட வடக்கில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஆரம்பம்!

March 21, 2020
in News, Politics, World
0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

இதற்காக பணிகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி, பலாலி, இரணைமடு, கேப்பாவிலவு போன்ற பகுதியில் இந்த தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் இந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்படவுள்ளனர்.

அத்துடன், விமானப்படை முகாம்களிலேயே இந்த நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குரிய கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமம் 522வது படை முகாமில் அமைக்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் கூறியுள்ளார்.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பணிகளை முன்னெடுக்க ஐந்து மில்லியன் ரூபா நிதி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், மூன்று நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படாது – அரசாங்கம்!

Next Post

கொரோனா வைரஸ் பரவுவதற்கு புகைப்பிடித்தல் பிரதான காரணம்

Next Post

கொரோனா வைரஸ் பரவுவதற்கு புகைப்பிடித்தல் பிரதான காரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures