நாவலப்பிட்டி தெகிந்தர பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து 70 அடி பள்ளத்தில் வீழ்ந்தமை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.












