Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் மக்களுக்கான தேவைகளை ஜக்கிய தேசியக் கட்சியால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் – விஜயகலா

March 19, 2020
in News, Politics, World
0

தமிழ் மக்களுக்கான தீர்வு உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் ஜக்கிய தேசியக் கட்சியால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்று முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை தாக்கல் செய்த பின்னர், செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனநாயக ரீதியான வாழ்க்கையினை கடந்த 5 வருடமாக நாங்கள் வாழ்ந்திருந்தோம். ஆனாலும் கடந்த ஜனாதிபதி தேர்தல் ஊடாக எங்களுடைய கட்சியின் வேட்பாளருக்கு வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களித்திருந்த வேளையிலும் மாற்றுக் கட்சி வெற்றி பெற்றிருந்தது.

அந்த மாற்று கட்சியால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. இதனை கடந்த காலத்தில் அவர்களின் ஆட்சி தெட்டத்தெளிவாக காட்டியிருந்தது.

இன்றைய அரசாங்கத்திற்கு ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரியாது. அராஜகம்தான் இங்கு நடக்கின்றது. எனவேதான் எமது ஆட்சிக் காலத்தில் இடை நடுவில் நிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்களை மீண்டும் தொடர்ந்து முன்னெடுப்பதற்று எமக்கான நாடாளுமன்ற பிதிநிதித்துவம் தேவையாக உள்ளது.

தமிழ் மக்களுக்கான தீர்வு என்பது மட்டுமல்லாமல், ஏனைய தேவைகளையும் ஜக்கிய தேசியக் கட்சியின் ஊடாகவே பெற்றுக்கொடுக்க முடியும்” என மேலும் தெரிவித்தார்.

Previous Post

தைரியம் கொடுக்கவேண்டிய தருணத்தில், தேர்தல் பற்றி உரை

Next Post

நீதியின் குரல் வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் – சி.வி

Next Post

நீதியின் குரல் வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் – சி.வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures