Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளவர்களின் வீடுகளுக்கு போஸ்டர்

March 18, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் பரவுவதனை தடுப்பதற்காக சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளவர்களின் வீடுகளுக்கு போஸ்டர் ஒன்றை ஒட்டுவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்வது அவர்களை சமூகத்தில் ஒதுக்குவதற்கோ அல்லது தனிமைப்படுத்துவதற்கோ அல்ல வைரஸ் வெளியேறுவதனை தவிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வரையில் 2258 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தடுத்து வைப்பதற்கு ந டவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 9ஆம் திகதி வரை இலங்கைக்கு வந்த 1500 – 2000 பேர் நாட்டினுள் உள்ள நிலையில் அவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள ஆலோசனைக்கமைய சுய தனிமைப்படுத்தலில் வைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இவர்களில் 800 பேர் புத்தளம் மாவட்டத்தில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அரசாங்கத்தின் ஆலோசனைக்கமைய அவர்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடவில்லை என்றால் அந்த பிரதேசம் குறித்து தீர்மானம் எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

வெளியில் நடமாடும் அதிக தொற்றாளிகள் – முடக்கப்படவுள்ள புத்தளம்

Next Post

குடிவரவு, குடியகல்வு திணைக்கள செயற்பாடு ஜனாதிபதிக்கு கீழ்

Next Post

குடிவரவு, குடியகல்வு திணைக்கள செயற்பாடு ஜனாதிபதிக்கு கீழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures