Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அருவா – சரியான தலைப்பு: ஞானவேல் ராஜா

March 15, 2020
in Cinema
0

இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகும் அருவா படத்தில், நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க, இமான் இசையமைக்கிறார். படத்துக்கான தொழில் நுட்பக் கலைஞர்களும், நடிகர் – நடிகையரும் தேர்வு நடக்கிறது.

அருவா படம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருப்பதாவது: சுவாரசியமான கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஹரி – சூர்யா இணையும் ஆறாவது படம் அருவா. அருவாவில், ஹரி மீண்டும் குடும்ப செண்டிமெண்ட்டுக்கு வருகிறார். அருவா படம், வேல் மற்றும் கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களின் கலவையாக இருக்கும் என தோன்றுகிறது.

சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படம் வெற்றி பெறக் காரணம், அதிலிருந்த உணர்வுகள் தான். குடும்பத்துக்குள் இருக்கும் பிரச்னைகளைக் காட்டும் படங்களைப் பார்க்க, மக்கள் தயாராக இருக்கிறார்கள். அருவா சகோதரர்களைப் பற்றிய படம். முந்தைய ஹரி – சூர்யா படம் போல அருவா இருக்காது என்பது மட்டும் உறுதி.

அருவா என்ற தலைப்பு, ஒரு கிராமத்து உணர்வைக் கொடுக்கிறது. அருவாவை, ஹரியின் எல்லாப் படங்களிலும் பார்க்க முடியும் அது ஒருவேளை காரணமாக இருக்கலாம். ஆனால், இந்த தலைப்பைத் தான் இயக்குநர் சொன்னார். கதை தெரியும் என்பதால், இது சரியான தலைப்பாக ஆகி விடும் என நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Previous Post

இன்று முதல் தற்காலிகத் தடை

Next Post

ரஜினியை பாராட்டும் லாரன்ஸ்!

Next Post

ரஜினியை பாராட்டும் லாரன்ஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures