Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ராகவா லாரன்ஸ் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை

March 12, 2020
in Cinema
0
ராகவா லாரன்ஸ் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை

காஞ்சனா 3 திரைப்படத்துக்குப் பின், தமிழ் படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்தார் நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ். இவர், தற்போது காஞ்சனா படத்தின் இந்தி பதிப்பான லக்ஷ்மி பாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தில் கதாநாயகனாக அக்ஷய் குமார் நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படம் ஒன்றை பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன் தயாரிக்கிறார். இவர், ஜிகர்தண்டா, ஆடுகளம், பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களை ஏற்கனவே தயாரித்தவர். ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கும் அந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்ற ஜி.வி.பிரகாஷ்குமார் மட்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

சக நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் பெயர் கூட சூட்டப்படாத அந்த புதிய படம் குறித்த முழுமையான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எஸ்.கதிரேசன் தெரிவித்திருக்கிறார்.

Previous Post

விஷால் ஒரு பொறுக்கி – மிஷ்கின் ஆத்திரம்

Next Post

வடக்கில் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை

Next Post
வடக்கில் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை

வடக்கில் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures