Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால்

March 12, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் உலகை ஆக்கிரமித்து வரும் நிலையில், அந்நிய நாட்டு பிரஜைகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அழைத்துவரப்படுவதை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

கொரொனா தொற்றிலிருந்து எமது மாவட்டத்தினை பாதுகாப்போம் என்னும் தலைப்பில் நேற்று தமிழ் உணர்வாளர் அமைப்பு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இவ்வாறு ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இந்த மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், இந்த மாவட்டம் தனிமைப்படுத்தப்படும் நிலையேற்படும். இந்த அனர்த்ததில் இருந்து தமது மாவட்டத்தினை பாதுகாக்க தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வருமாறு தமிழ் உணர்வாளர் அமைப்பு  அந்த அழைப்பில் தெரிவித்திருந்தது.

இந்த அழைப்பிற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுமையான ஸ்தம்பிதமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டு பூரண ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் இயங்குகின்ற போதிலும் மாணவர்களின் வரவு குறைவான நிலையிலேயே இருப்பதை காணமுடிகின்றதோடு, அரச அலுவலகங்கள் இயங்குகின்ற நிலையிலும் மக்களின் வரவு குறைவாக காணப்படுவதன் காரணமாக அரச அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தூர இடங்களுக்கான தனியார் போக்குவரத்து சேவைகள் நடைபெறுகின்றபோதிலும் உள்ளளூர் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கை போக்குவரத்து சேவை பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் மெலம் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள தமிழ் உணர்வாளர் அமைப்பு, “இத்தாலி, ஈரான், தென்கொரிய நாட்டில் இருந்து வரும் பயணிகள் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு அழைத்துவரப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு, அவர்களில் கொரோனா அறிகுறிகள் தென்படுவோரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எமது நாட்டு பிரஜைகளை கொரனாவில் இருந்து பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. ஆனால் வெளிநாட்டவர்களை அழைத்துவந்து பராமரிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை.

இந்த மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், இந்த மாவட்டம் தனிமைப்படுத்தப்படும் நிலையேற்படும். இந்த அனர்த்ததில் இருந்து எமது மாவட்டத்தினை பாதுகாக்க வீட்டுக்குள் முடக்கி வீதிகளை வெறிச்சோடச்செய்து எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்” எனதெரிவித்துள்ளது.

Previous Post

நளினி ரட்ணராஜா நீக்கப்பட்டுள்ளார் நளினி ரட்ணராஜா நீக்கப்பட்டுள்ளார்

Next Post

எதிர்வரும் நாட்களில் பலர் பாதிக்கப்படுவதை நாங்கள் பார்க்கப்போகின்றோம்

Next Post

எதிர்வரும் நாட்களில் பலர் பாதிக்கப்படுவதை நாங்கள் பார்க்கப்போகின்றோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures