Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணிக்குள் பிளவு இல்லை!

March 11, 2020
in News, Politics, World
0
சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான  கூட்டணிக்குள் பிளவு  இல்லை!

சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள் எந்த பிளவும் இல்லை என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் தலைமையில் அவரது இல்லத்தில் கூட்டணியின் ஏனைய பங்காளிக் கட்சிகளுடன் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் கூடி இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டது.

வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவு நாளைமறுதினம் 12 ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும். அத்தோடு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொதுத் தேர்தல் பரப்புரை வரும் 15 ஆம் திகதி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பிக்கப்படும்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள் பிளவு என்று ஊடகங்களில் வந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. நாம் பங்காளிக் கட்சிகளுடன் பேசி தகுந்த தீர்மானத்திற்கு வந்துள்ளோம்” என்றார்.

Previous Post

ஷ்ரத்தாவின் ஆதங்கம்!

Next Post

இலங்கையிலும் கொரோனா வைரஸ் ஏற்படும் அபாயம்

Next Post
இலங்கையிலும் கொரோனா வைரஸ் ஏற்படும் அபாயம்

இலங்கையிலும் கொரோனா வைரஸ் ஏற்படும் அபாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures