கொரோனா தனிமைப்படுத்தல் மையங்களாக வத்தளை, ஹெந்தலை பகுதியிலுள்ள தொழுநோய் வைத்தியசாலை, கந்தக்காடு புனர்வாழ்வு மையம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் ஆகியன தெரிவு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், ஹெந்தல பகுதி மக்கள் நடத்திய தொடர் போராட்டங்களையடுத்து, அரசாங்கம் அந்த முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது. இதையடுத்து, கொரோனா தனிமைப்படுத்தல் மையமாக மட்டக்களப்பு மாத்திரமே செயற்படவுள்ளதாக அறிய வருகிறது.
கொரோனா தனிமைப்படுத்தல் மையமாக மாற்றப்பட்டுள்ள மட்டக்களப்பு பல்கலைகழகம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே ஈரான், இத்தாலி, தென்கொரியாவிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
தென்கொரியா, ஈரான், இத்தாலியிலிருந்து வருபவர்கள் விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, மட்டக்களப்பிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இந்த பணியை இராணுவமே மேற்கொள்ளும்.
இதுதவிர, உள்நாட்டில் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களும் மட்டக்களப்பிற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
