Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ. நா பேரவையில் கால நீட்டிப்பை இலங்கை ஏன் கோரியது எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி

March 5, 2020
in News, Politics, World
0
ஐ. நா  பேரவையில் கால நீட்டிப்பை இலங்கை ஏன் கோரியது எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி

சர்வதேச விசாரணை முடிவடைந்து இருந்தால் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கால நீட்டிப்பை ஏன் கோரியது என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடைபெற்று முடிந்து விட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் மேடைகளில் கூறி வருகின்றார்.

அவர் கூறுகின்ற கருத்தானது இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியான பூர்வாங்க விசாரணைகளே இடம்பெற்று உள்ளன.

அது தொடர்பான அறிக்கை வெளிவந்திருக்கின்றது. அதில் எழுத்து மூலமான வாக்குமூலங்கள் அறிக்கைகள் பெறப்பட்டு வலுவான அறிக்கை வெளிவந்தது.

பொதுவாக பாரிய குற்றங்களுக்கு மேல் நீதிமன்றங்கள், ரியல் அட் பார் நீதிமன்ற விசாரணைகள் ஊடாகவே நீதிகளை பெற்றுக்கொள்ளமுடியும். அவ்வாறான ஓர் பொறிமுறையை நாம் கோரி வருகின்றோம்.

அந்த வகையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் சர்வதேச வழக்கறிஞர்கள் சர்வதேச புலனாய்வாளர்கள் போன்றவர்களை உள்ளடக்கிய விசாரணையே நாம் கோரி நிற்கின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் கூறுவது O.I.L.S விசாரணை அறிக்கையை வைத்தே குறிப்பிடுகின்றார்.

அது இலங்கை விசாரணைக்கான அலுவலகம் அதில் வாக்குமூலம் அறிக்கை அனுப்புமாறு கோரப்பட்டு பல வாக்குமூலம் அனுப்பப்பட்டிருந்தது.

சர்வதேச ரீதியான பூர்வாங்க விசாரணையில் அந்த அறிக்கை 2015ம் ஆண்டு வெளிவந்தது . அந்த அறிக்கை வெளி வந்து மனித உரிமைப் பேரவையில் வெளியிடப்பட்டது.

அப்போது இலங்கை அரசு நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் புதிய அரசு தங்களுக்கு கால நீடிப்பு தரவேண்டும் என்றும் கலப்புப் பொறிமுறை ஊடான விசாரணைக்கு இனை அனுசரனை வழங்கியது.

சுமந்திரன் கூறுவதுபோல சர்வதேச விசாரணை முடிவடைந்து இருந்தால் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கால நீட்டிப்பை ஏன் கோரியது.

எனவே சர்வதேச விசாரணைதான் நடத்தப்பட வேண்டும். அதனை தான் நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

சர்வதேச விசாரணை ஊடாக சர்வதேச நீதிபதிகள் வழக்கறிஞர்கள் புலனாய்வாளர்களே உள்ளடக்கி மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள் ஊடாக உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அதனை நாம் இன்றுவரை வலியுறுத்தி வருகின்றோம்” என தெரிவித்தார்.

Previous Post

இலங்கையில் மீண்டும் அச்ச சூழல் மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது

Next Post

கடந்த அரசாங்கத்தின் காலத்தில், மக்களே கஷ்டங்களுக்கு உள்ளானர் – மகிந்த

Next Post
கடந்த அரசாங்கத்தின் காலத்தில், மக்களே கஷ்டங்களுக்கு உள்ளானர் – மகிந்த

கடந்த அரசாங்கத்தின் காலத்தில், மக்களே கஷ்டங்களுக்கு உள்ளானர் - மகிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சாய் அபயங்கர் இசையில் வெளியான ‘ரதிமா’ சுயாதீன இசை வீடியோ ஆல்பம்

சாய் அபயங்கர் இசையில் வெளியான ‘ரதிமா’ சுயாதீன இசை வீடியோ ஆல்பம்

August 27, 2026
எல் நினோ தாக்கம் : ஒக்டோபர், நவம்பரில் சராசரியை விட அதிக மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

எல் நினோ தாக்கம் : ஒக்டோபர், நவம்பரில் சராசரியை விட அதிக மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

August 27, 2026
பிரகாஷ் ராஜ் நடிக்கும் ‘ஃபாதர்’ படத்தின் டீஸர் வெளியீடு

பிரகாஷ் ராஜ் நடிக்கும் ‘ஃபாதர்’ படத்தின் டீஸர் வெளியீடு

August 26, 2026
ஃபலோ ஒன்னில் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 199 – 3 விக்

ஃபலோ ஒன்னில் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 199 – 3 விக்

August 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures