அவுஸ்ரேலியாவின் NT News என்ற உள்ளூர் பத்திரிகை இன்று வினோதமான செயல் ஒன்றை புரிந்துள்ளது .கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து அவுஸ்ரேலியர்கள் toilet paper களை அளவுக்கதிகமாக கொள்வனவு செய்திருந்தனர் .
அவை உள்ளூர் உற்பத்திகளாக இருந்த போதும் அந்த நாட்டு மக்கள் அவசர கதியில் அவற்றை பதுக்கியுள்ளமை நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ள அப்பத்திரிகை ,தனது செய்தி பக்கங்களில் 8 பக்கங்களை வெறுமையாக விட்டு இவற்றை அவசரத்துக்கு உபயோகியுங்கள் என தெரிவித்துள்ளமை இப்போது 8 பக்கங்களில் வரும் செய்திகளைவிட கனதியாக பரவி வருகிறது .
