மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஊடாக வெளிநாட்டு பணிக்கு செல்லும் இலங்கையர்களுக்கு விசேட சலுகை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உட்பட உரிய நிறுவனங்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மத்தல விமான நிலையம் ஊடாக வெளிநாடு செல்லும் விமான பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் ஊடாக விமான சேவையை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் 2 லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் தொழிலுக்காக வெளிநாடு செல்கின்றனர். அவர்களில் 20 வீதமானோர் மத்தல விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்களாகும்.
அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாடு செல்வதற்கு பதிலாக மிகவும் இலகுவதாக மத்தல விமான நிலையம் ஊடாக வெளிநாடு செல்ல முடியும்.
இந்த பணியாளர்கள் மத்தல விமான நிலையம் ஊடாக வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு கட்டணம் உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

