பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ச எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என அறியமுடிகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கான கோரிக்கையை கட்சி தலைமையிடம் அவர் விடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனான நாமல் ராஜபக்ச அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

