யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் சிலருக்கும் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் இடம்பெற்றது.
கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமாகண ஆளுநராக பணியாற்றிய காலப்பகுதியில் தம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றி தந்தமைக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள், தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் பேரவைக்குழு உறுப்பினராக கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மாணவர் ஒன்றியத்தின் புதிய பிரதிநிதிகளுடன் இணைந்து தீர்ப்பதற்கு உதவி புரியுமாறும் கேட்டுக் கொண்டனர்.
