சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் கூட கையேந்தும் நிலைமைக்கு இன்றைய அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை யாரிடமும் கையேந்தும் தேசமாக ஒருபோதும் இருக்கக் கூடாது.
தமது ஆட்சி காலத்தில் பொருளாதாரத்தைப் பலப்படுத்த பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. கடன்களை செலுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு பொருளாதார திட்டமொன்று இருந்தமையினாலேயே சர்வதேச நாணய நிதியம் நிதி வழங்கியது.
ஆனால் புதிய அரசாங்கம் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாமையினால் சீனாவிடமும் இந்தியாவிடமும் கடன் சலுகை கோருகின்றது.
எனினும் இலங்கையை சர்வதேசம் முன் கையேந்தும் நிலைக்கு தள்ளுவது நாட்டின் மீதான பிம்பத்தை சீரழிக்கும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

